ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

கோத்தாபய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது, அனுசாசன உரை நிகழ்த்திய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்,

“இராணுவ ஆட்சியின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று மகாசங்கம் விரும்புகிறது.

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த பெருமளவு பௌத்த பிக்குகள், அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!