தமிழ்க் கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கவில்லை-ராஜித!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கொண்டு வரப் பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மானத்தை எதிர்ப்­ப­தற்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வொரு நிபந்த­னை­யும் விதிக்­க­வில்லை.

2015ஆம் ஆண்டு முன்­வைத்த கோரிக்­கையை தற்­போது மீண்­டும் முன்வைத்துள் ளார்­கள். அவ்­வ­ள­வு­தான். அந்­தக் கோரிக்­கை­க­ளில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்­கள் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது உண்­மை­தான். இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனாரத்ன தெரி­வித்­தார்.

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தற்கு, தமிழ்த் தேசி­யக் கூட் ட­மைப்பு தலைமை அமைச்­ச­ரு­டன் ரணி­லு­டன் எந்­த­வொரு உடன்­பாட்­டை­யும் மேற்­கொள்­ள­வில்லை என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்த கருத்து, கூட்­ட­மைப்­புக்­குள் ஏற்­க­னவே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யில், அமைச்­சர் ராஜித இந்­தக் கருத்தை வெளி­யிட்­டுள்­ளார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்பு, அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில் அமைச்­ச­ரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித கலந்து கொண்­டார்.

‘தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் அர­சுக்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டதா? கூட்­ட­மைப்பு தலைமை அமைச்­ச­ருக்கு ஆத­ர­வ­ளிக்க நிபந்­தனை விதிக்­கப்­பட்­டதா?’ என்று செய்­தி­யா­ள­ரால் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

‘அவ்­வாறு எந்த நிபந்­த­னை­யும் விதிக்­கப்­ப­ட­வில்லை. அவர்­கள் 2015ஆம் ஆண்டு முன்­வைத்த கோரிக்­கையை தற்­போது மீண்­டும் முன்­வைத்­துள்­ளார்­கள். அதா­வது காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும். அர­சி­யல் கைதி­கள் தொடர்­பான வழக்­கு­கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். காண­மாற்­போ­னோர் தொடர்­பான பிரச்­சி­னைக்­குத் தீர்வு வேண்­டும் என்­ப­னவே கூட்­ட­மைப்­பின் பிரச்­சி­னை­யா­கும். அது நீண்­ட­நாள் பிரச்­சி­னை­யா­கும். அவை உண்­மை­யில் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்­டும். அதற்­காக நிபந்­தனை விதிக்­கப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அது தொடர்­பில் பேச­வு­மில்லை’ என்று பதி­ல­ளித்­தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!