முசலியில் உடல்களைப் புதைக்கும் விவகாரம்! – செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை.

கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தில் மக்கள் தொடர்பாகவும் கரிசனை கொள்ளவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு புதைப்பதற்கு எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அப்பால் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலோ கொரோனா கிருமி பரவும் வகையிலாக மக்கள் அச்சம் கொள்ளும் விதமாகவே இச்செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கும் அப்பால் கொரோனா கிருமிகள் நிலத்தடி நீரின் மூலமாகவோ வேறு வகையிலோ மக்களுக்கு பரவாது உள்ளதையும் உறுதிப்படுத்தும் விதமாக அமைய வேண்டும்.

எனவே, மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதனை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!