கொரோனா தொற்றின் 2 ஆம் அலை – 116 பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களில் 71 வயதுக்கு மேற்பட்ட நபர்களே அதிகம் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, 71 வயதுக்கு மேற்பட்ட 55 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 61 இற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்ட 23 பேரும், 51 இற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 18 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும், 41 இற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட 13 பேரும், 31 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 10 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட மூன்று பேரும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட முதலாவது கொரோனா அலையில், 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!