கிராமப்புற அபிவிருத்தி குறித்து பிரதமர் விசேட நடவடிக்கை!

வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு, செயற்றிட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிதி அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும் இந்த திட்டத்தின் ஊடாக 72 வீதமான இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த நிதி அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!