அமெரிக்க விமான விபத்தில் நீடிக்கும் மர்மம்!

அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனின் மேல் தீபகற்பத்திலே F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு இராணுவ பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான F-16 போர் விமானத்தின் விமானியை அவசர குழுவினர் இரவு முழுவதும் தேடி வந்தனர்.

மாடிசனில் உள்ள Truax Field தேசிய விமானப்படை தளத்தில் அதன் 115 வது போர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட F-16 போர் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் விபத்துக்குள்ளானது என்று விஸ்கான்சின் தேசிய வான்பாதுகாப்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில், விமானத்தில் ஒரே ஒரு விமானி மட்டுமே இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவியிடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம், விமானியின் நிலை ஆகியவை குறித்து தற்போது வரை எந்த தகவலும் தெரியவில்லை, மேலும் சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டள்ளது என விஸ்கான்சின் தேசிய வான்பாதுகாப்பு படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!