தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலம் குறைக்கப்படும் : இராணுவத்தளபதி முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் பயணிகளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலம் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தும் காலம் 28 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்படவுள்ளதாக, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இதற்கமைய, இது தொடர்பான அறிக்கை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், வீடுகளிலும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

எனினும், தற்போதைய புதிய தீர்மானத்தின் பிரகாரம், 14 நாட்களின் பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின், வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டிய தேவை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தை மீளத் திறப்பது குறித்து, எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கப்படும் எனவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!