முன்பள்ளி பாடசாலைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள், பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முன்பள்ளி பாடசாலைகளை ஜனவரி மாதத்தில் திறப்பதற்கு, சுகாதாரத் தரப்பினரால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்பள்ளிகளுக்கான தேசிய கொள்கை வரைபு, இன்று மாலை கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸிடம் ஒப்படைக்கப்படும் எனவும், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கூறியுள்ளார்.

இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்கள், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்திதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு, தமது அமைச்சு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!