நல்லாட்சியில் மக்கள் இழந்தவற்றை நாம் மீண்டும் பெற்றுக் கொடுப்போம் : அமைச்சர் ரோஹித்த!

நல்லாட்சி அரசாங்கத்தினால் இழக்கப்பட்டவற்றை மீண்டும் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக, அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டிற்கு இழக்கப்பட்டவற்றை மீண்டும் நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலில் இழந்த உயிர்களை மீண்டும் பெறமுடியாது. இருப்பினும் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை வழங்கமுடியும்.

மாகாண சபை முறைமையில் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு புதிய அரசியலமைப்பில் தீர்வும் காணமுடியும் என்கிற போதிலும் தேர்தல் இல்லாமையே இன்று பிரச்சினை.

தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். நல்லாட்சி இல்லாதொழித்தவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் நாட்டிற்கு அவசியம்.

அந்தசபைகளில் மக்களின் பிரதிநிதிகள் இல்லை. அவற்றுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிக்கு என்ன நடக்கின்றது என்பதை வினவ தேர்தல் அவசியம்” என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!