பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் எந்தெந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. புதித்தாக பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தின் தென்கிழுக்கு பகுதியில் தோன்றியதாக கருதப்படும் நிலையில், அது தற்போது நாடு முழுவதும் விரைவாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்த புதிய வகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவைச் சுற்றி 57 இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்திய ஆய்வாளர்கள், இங்கிலாந்தில் 45 இடங்களிலும், ஸ்காட்லாந்தில் ஆறு இடங்களிலும், வேல்ஸில் ஆறு இடங்களிலும் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா ஜெனோமிக்ஸ் யுகே கூட்டமைப்பு (COG-UK) கண்காணிப்புக் குழு VUI-202012/01(புதிய வகை கொரோனா வைரஸின்) இன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டுள்ளது.

இந்த வைரஸ் Liverpool, Leicester, Manchester, Birmingham மற்றும் Bristol, ஆகிய பகுதிகளில்

லீட்ஸ், ஆக்ஸ்போர்டு, கோவென்ட்ரி மற்றும் கேம்பிரிட்ஜ் நகரங்களுக்கு அருகிலுள்ள இடங்களிலும் கிடைத்த மாதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிற்து.

ஸ்காட்லாந்தில் இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் வழக்குகள், முக்கியமாக கிளாஸ்கோவைச் சுற்றி இருப்பதாகவும், வேல்ஸில் ஸ்வான்சீ, நியூபோர்ட் மற்றும் கார்டிப் அருகே இதன் வழக்குகள் பதிவாகியுள்ளன.

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 3,000 மாதிரிகளை எடுத்து ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

பொது சுகாதார இங்கிலாந்து இதற்கு முன்பு 1,000 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை மட்டுமே அறிவித்தது.

சமீபத்திய தரவுகளின்படி புதிய கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாக கூறப்படும் பகுதிகளின் பட்டியல்
கிளாஸ்கோ, லின்வுட், நியூட்டன் மெர்ன்ஸ், ஏர்டிரி, போன்ஹில் மற்றும் லென்ஸி ஆகிய பகுதிகளிலும்
கிராமப்புறமான நார்தம்பர்லேண்டில் ரோத் பரிக்கு அருகிலும்

நியூகேஸில்-ஆன்-டைன் மற்றும் லோ பெல்லுக்கு அருகிலுள்ள கேட்ஸ்ஹெட்டில்

கவுண்டி டர்ஹாமில் பிஷப் ஆக்லாந்து

கும்ப்ரியாவில் பென்ரித் அருகில்

மிடில்ஸ்பரோ

லங்காஷயரில் ஹர்ஸ்ட் கிரீன்

கிளெக்ஹீட்டன்

ஹல் அருகே உள்ள போக்லிங்டனில்

மெர்ஸ்சைட்டின் வடக்கில், கிராஸ்பி மற்றும் கிர்க்பிக்கு அருகில் இரண்டு பகுதிகள்

மத்திய மான்செஸ்டரின் ஒரு பகுதி

தெற்கு யார்க்ஷயரில் மால்ட்பி அருகே

ரெக்ஷாமில் ஒரு பகுதி மற்றும் செஷயரின் பர்ட்டனில் ஒரு பகுதி

ஸ்டாபோர்ட்ஷையரில் மேட்லாக் அருகில்

நாட்டிங்ஹாம்ஷையரில் ஈக்ரிங் அருகில்

லிங்கன்ஷையரில் உட்ஹால் ஸ்பா

ஸ்டாஃபோர்ட்ஷையரில் ஸ்டாபோர்டுக்கு அருகில்

லெய்செஸ்டர் பகுதியில்

ஓகாமுக்கு அருகிலுள்ள அப்பர் ஹம்பிள்டன்
நார்விச் அருகிலுள்ள டெரெஹாம்

இப்ஸ்விச் அருகே ஸ்டோமார்க்கெட்

கேம்பிரிட்ஜ்ஷையரில் வில்லிங்ஹாம் அருகே

கெட்டெரிங்கில்

கோவென்ட்ரிக்கு அருகிலுள்ள கெனில்வொர்த்தில்

பர்மிங்காமின் ஓல்ட்பரி பகுதிக்கு அருகில்

வொர்செஸ்டரில்

ஹியர்போர்டில்

பிஷ்கார்ட், நீத், பிரிட்ஜெண்ட், பாரி மற்றும் நியூபோர்ட்டில்

பிரிஸ்டலில்

பிரிட்ஜ்வாட்டருக்கு அருகில் மற்றும் எக்ஸிடெர் அருகில்

தெற்கு கடற்கரையில் டோர்செஸ்டருக்கு அருகில்

தாட்சம் அருகிலுள்ள நியூபரியில்

வின்செஸ்டருக்கு அருகிலுள்ள நியூ ஆல்ரெஸ்போர்டில்

பில்லிங்ஷர்ஸ்ட் அருகில்

டோர்கிங்கில்

ஹெயில்ஷாம் அருகில்

கேன்டர்பரிக்கு அருகில் (இந்த புதிய வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது)
மத்திய லண்டனில்

ஆக்ஸ்போர்டு அருகில்

செயின்ட் ஆல்பன்ஸுக்கு அருகிலுள்ள வெல்வின் கார்டன் நகரில்

பிரைன்ட்ரீ அருகில்

பெட்போர்டுக்கு அருகிலுள்ள ஸ்டாக்ஸ்டனில்

இந்த புதிய வைரஸ் ஒரு குறிப்பிட்ட பகுதியோடு நிற்கவில்லை, பல இடங்களில் பரவ துவங்கியுள்ளது. புத்தாண்டுக்கு முழு ஊரடங்கு விதிக்க்காவிட்டால், கட்டுப்பாடுகளை கடுமையாக்காமல் விட்டால், பிரித்தானியா ஒரு மனித பேரழிவை எதிர் கொள்ள நேரிடும் அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகர்களில் ஒருவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!