சீனாவில் பயங்கரம்: 7 பேரை கொடூரமாக குத்தி கொன்ற சைக்கோ!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கெயுவான் நகரில் ஒரு சவுனா (பின்லாந்து ஸ்டீம் பாத்) மற்றும் பாத் ஹவுஸிற்கு வெளியே, ஒரு நபர் திடீரென கத்தியைக் கொண்டு பலரை சரமாரியாக தாக்கினார். இந்த தனிநபர் வெறிச்செயலில், 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் கொலையாளியை பிடிக்கவந்த ஒரு பொலிஸ் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவரை சம்பவ இடத்திலேயே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், அவரது குடும்பப்பெயரான யாங் மூலம் ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார். அதே நேரத்தில் தாக்குதலுக்கான நோக்கம் தெரியவில்லை.

சீன சட்டம் துப்பாக்கிகளை விற்பனை செய்வதையும் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்துகிறது. இதனால், வெகுஜன தாக்குதல்கள் பொதுவாக கத்திகள் அல்லது வீட்டில் வெடிபொருட்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலங்களில் இதேபோன்ற தாக்குதல்களைச் செய்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சமூகத்திற்கு எதிரான வெறுப்பைத் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

முந்தைய தாக்குதல்களில், இந்த ஆண்டு ஜூன் மாதம் குவாங்சியின் தெற்கு பிராந்தியத்தில் ஒரு மழலையர் பள்ளியில் கத்தியால் குத்திய பள்ளி பாதுகாப்பு காவலர், குறைந்தது 39 பேர் காயமடையச் செய்தார். அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதேபோல், 2018-ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் ஒரு வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய கத்தித் தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!