அரசியல் கைதிகள் எவரும் தடுத்துவைக்கப்படவில்லை – நீதி அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் தடுத்துவைக்கப்படவில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களின் மீதான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நீதியமைச்சருக்கு அதிகாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்,

எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தினாலேயே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்,

எவ்வாறாயினும் வழக்குகள் தொடராமல் தொடர்ந்தும் சிறைகளில் கைதிகளை தடுத்து வைத்திருப்பதனை தாம் சட்டத்தரணியென்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நீதியமைச்சினால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது எனவும் அரசாங்கம் அது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!