அமைச்சர் வாசுதேவாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்று உறுப்பினர்களுள் தயாசிறி ஜயசேகர , ரவூப் ஹக்கீம் , வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர் உட்பட 300 ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!