துவக்­குத் தூக்­கிய எல்­லோ­ருக்­குமே சிலை வைக்க முடியாது- லோக­த­யா­ளன் !!

தியாகி திலீ­பன், மாந­கர சபை­யில் மட்­டு­மன்றி எமது இனத்­தின் அடை­யா­ளத்­துக்­கும் அப்­பால் மனித குலத்­திற்கே அடை­யா­ள­மா­கத் திகழ்ந்­தார். போராட்ட வடி­வத்­துக்­குத் தாமே சொந்­தக்­கா­ரர் என்று மார்­தட்­டி­யோ­ரைக் கிழித்­தெ­றிந்து ஆகு­தி­யா­கிய ஒரு­வ­னுக்கே இன்று சிலை வைக்­கப்­ப­டு­கின்­றதே அன்றி துவக்­குத் தூக்­கி­ய­வர்­க­ளுக்­கெல்­லாம், அர­சி­யல் பேசி­ய­வர்­க­ளுக்­கெல்­லாம் சிலை வைக்­கும் சபை­யாக மாற்­று­மாறு கோர­வில்லை. புனி­தர்­களை மட்­டுமே கருத்­தில் கொள்­ள­வேண்­டும்.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பி­னர் ந.லோக­த­யா­ளன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் கன்னி அமர்வு சபை மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அங்கு கன்னி உரை­யாற்­று­கை­யில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். தமி­ழர் தம் தேச­வி­டு­த­லைக்­கா­கத் தம்­மு­யிரை உவந்­த­ளித்த வீர­ம­ற­வர்­களை அவர் உரை ஆரம்­பத்­தில் நினை­வு­கூர்ந்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்­தச் சபையை நம்பி யாழ்ப்­பாண மாந­கர சபை எல்­லை­யில், வாழும் பொது­மக்­க­ளும், பல்­லா­யி­ரம் வர்த்­த­கர்­கள், நிறு­வ­னத்­தி­ன­ரும் உள்­ள­னர். அவர்­க­ளின் வரிப்­ப­ணத்­தி­லும், பொது­மக்­க­ளின் மேம்­பாட்­டுக்­காக வழங்­கப்­பட்ட பணத்­தி­லும் இந்­தச் சபை­யின் பெய­ரில் பல கோடி சொத்­துக்­கள் உள்­ளன. அவை மழை­யி­லும் வெய்­யி­லி­லும் பழைய இருப்பா­கக் காணப்­பட்டு சபை பஞ்­சி­கா­வத்தை வியா­பார சந்­தை­போல் காட்­சி­ய­ளிக்­கி­றது.

சபை­யின் கடந்த ஆட்­சி­யில் ஊழல் நடந்­ததா என்று விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டும். அது நல்ல அறி­விப்பு, ஆனால் விசா­ரணை நடத்த இந்தச் சபை­யின் ஆயுள்­கா­லம் போது­மா­னதா என்று நான் அறி­யேன்.

இந்­தச் சபை­யில் கடந்த காலத்­தில் இடம்­பெற்ற விதி­மீ­றல் அல்­லது முறை­கேடு தொடர்­பில் பட்­டி­ய­லிட்­டால் 30 நிமி­ட­மும் போதாது. இருப்­பி­னும், சபைக்கு வர­வேண்­டிய வரு­மா­னங்­கள் பல தெரிந்தே இழக்­கப்­பட்­டுள்­ளன.

உதா­ர­ண­மாக யாழ்ப்­பாண நக­ரின் மத்­தி­யில் முத­லாம் மாடி­யில் இல.5 இல் இருந்த கட்­ட­டம் தெரிந்­து­கொண்டே கட்­சி­சார் நிறு­வ­னத்­துக்கு 2014 ஒக்­டோ­ப­ரில் வழங்­கப்­பட்­டது. 32 மாதங்­கள் எந்த வாட­கை­யும் செலுத்­தா­த­போ­தும் அதனை அற­விட எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கவோ, அடுத்த கட்­டத்­துக்­குக் கொண்­டு­செல்­லவோ இல்லை. இத­னால் சபைக்கு 10 இலட்­சத்து 16 ஆயி­ரம் ரூபா வரு­மா­னம் இன்­று­வரை செலுத்­தப்­ப­ட­வில்லை.

அதே­போல் தமது புகழ்ச்­சிக்­காக சபை­யின் சொத்தை தவ­றாக வழங்­கிய சம்­ப­வங்­க­ளும் உள்­ளன. உதா­ர­ண­மாக சபை­யின் வட புறத்தே உள்ள முன்­பள்­ளிக் கட்­ட­டத்­தில் இயங்­கிய ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை வெளி­யில் வாட­கைக்கு வீடு எடுத்து இயக்­கி­ய­போது சபை­யின் கட்­ட­டம் இல­வ­ச­மாக புல­னாய்­வா­ளர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்­டது. அவர்­கள் வெளி­யே­றி­ய­போ­தும் சபைக்கு அதிக செலவை வைத்­து­விட்டே சென்­றுள்­ள­னர்.

நக­ரைச் சீர்­ப­டுத்­த­வேண்­டு­மா­யின் கடந்த காலங்­க­ளில் நடை­பெற்ற தவ­று­கள் களை­யப்­ப­ட­வேண்­டும். தவ­றுக்­குக் கார­ண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். மாகாண அமைச்­சர்­க­ளின் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக் குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மை­யில் ஒரு விசா­ரணை நடத்­தி­யி­ருந்­தார். அந்த அறிக்கை முத­ல­மைச்­ச­ரி­டம் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே புதி­ய­தொரு விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்டு மூன்று மாதங்­க­ளுக்­குள் அறிக்கை சமர்­பிக்­கப்­ப­ட­வேண்­டும். அந்­தப் பரிந்­து­ரை­களை எமது சபை சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் உரிய திணைக்­க­ளங்­கள் ஊடாக விரை­வா­கச் செய்து முடிக்­க­வேண்­டும்.

தவ­றி­னால் மக்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளாக நேரி­டு­வோம். இந்­தச் சபை­யின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் கடந்த கால மோசடி தொடர்­பில் விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட வேண்­டும் என்ற எனது கோரிக்­கைக்கு எதி­ராக இருப்­பார்­கள் என்று எண்­ண­வில்லை. இத­னைச் செய­லு­ருப்­ப­டுத்­த­வேண்­டி­யது இந்­தச் சபை­யின் மேஜர் ஆனோல்ட்­டின் கடமை – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!