பலாங்கொடை, எம்பிலிப்பிட்டிய நகர சபை தலைவர்கள் பதவி இடைநிறுத்தம்

சப்ரகமுவ மாகாண ஆளுனரினால் பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய நகர சபை தலைவர்கள் விசாரணைகளுக்காக பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதற்கிணங்க, எம்பிலிப்பிட்டிய நகர சபை தலைவர் லலித் தர்மகீர்த்தி மற்றும் பலாங்கொடை நகர சபையின் தலைவர் சமில ஜயமினி விமலசேன ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நகர சபை தலைவர்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்கள் உப தலைவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

குறித்த நகர சபைத் தலைவர்கள் நகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகளுக்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தம்மிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுனர் வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!