நீதிமன்றங்களுக்கு சேறுபூம் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி முன்னெடுக்க கூடாது : அமைச்சர் மஹிந்தானந்த!

நீதிமன்றங்களுக்கு சேறுபூம் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி முன்னெடுக்க கூடாது என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“நீங்கள் பொலிமா அதிபர் குறித்து பேசினீர்கள். ஹரின் பெர்ணான்டோ அவர்களே உங்களது காலத்தில் இருந்த பொலிஸ்மா அதிபர் சட்டத்தை வளைத்த ஒருவர். அதற்கு எதிராக உங்களால் கருத்து தெரிவித்திருக்க முடியும் ஆனால் அவ்வாறு செயற்படவில்லை.

ஆகவே அதனை மறந்துவிடவேண்டாம். வேறு யாருக்கு வேண்டுமானாலும் சேறுபூசுங்கள், மஹிந்தானந்தவுக்கு சேறுபூசுங்கள், என்னைக்கொல்லுங்கள்.

ஆனால் நீதிமன்றத்திற்கு சேறு பூசவேண்டாம். ரஞ்சன் இராமநாயக்க வெளியில் வரும்போது, உயர்நீதிமன்றத்தை பார்த்து இவர்களை அனைவரும் திருடர்கள் என கூறினார். எவ்வளவு பாரதூரமான கருத்து அது. அதற்கு சாதகமாகவா நீங்கள் கருப்பு துண்டு அணிந்துள்ளீர்கள்? என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.

“நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்க முடியாது, ஆனால் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு முடியும். இது திருத்தப்படவேண்டும் இல்லை என்றால் தவறான ஒரு நிலைப்பாடு உருவாகும்.

இதேபோன்று ரஞ்சன் இராமநாயக்க குறித்து அவரது தனிப்பட்ட விடயங்களை பேசுவது தவறானது. காரணம் எனக்கு எனது தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அமைச்சரின் தனிப்பட்ட விடயங்களை பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே ரஞ்சன் இராமநாயக்க குறித்து அவரது தனிப்பட்ட விடயங்கள் பேசமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நீதிபதிகளின் தனிப்பட்ட விடயங்கள் அல்லாது அவர்களினால் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்தே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் குறிப்பிட்டார்.

“நாடாமன்றத்தின் ஊடாகவே மக்களின் நீதிசார்ந்த அதிகாரங்கள் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே நீதிமன்றத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்ப்புகள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

ஆகவே நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என குறிப்பிடமுடியாது. நாங்கள் நீதிபதிகளின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து இங்கு பேசவில்லை.

அவர்களினால் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு இந்த 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது தவறானது என முடிந்த நாடாளுமன்றத்திற்கு வெளியில் கருத்து தெரிவிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க சவால் விடுத்துள்ளார்.

“நீதிமன்ற சுயாதீனத்தன்மை மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். அனால் நாங்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் வழியில் செயற்படபோவதில்லை.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு அவசியமான விடயங்களுக்காகவே ரஞ்சன் இராமநாயக்க இவ்வாறு அனைத்து விடயங்களையும் முன்னெடுத்துள்ளார். இன்று ரஞ்சன் இராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த தீர்ப்பு தவறானது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியானால் அந்த தீர்ப்பில் தவறிருக்குமானால் அதனை நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு உட்படாது வெளியில் சென்று ஊடகங்களிடம் உங்கள் கருத்துக்களை தெரிவித்து பார்க்குமாறு நான் சவால் விடுக்கின்றேன்.

இவ்வாறு வரப்பிரசாதங்களுக்கு உட்பட்டு பயந்து செயற்படாது வெளியில் சென்று பேசுங்கள்“என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவில் மாவட்டத்தில் அரசாங்கத்தின் கெடுபிடி அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!