மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் மூவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை எவ்வாறு கையாள்வது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் முவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் விசாரணை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!