எரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு

எரிசக்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரினால் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது,

காணொளி வாயிலாக நேற்று இரவு நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்,

அத்துடன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சர்வதேச சந்தையில் 57 டொலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்,

மேலும் இதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு லீற்றருக்கு 16 ரூபா இழப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் 300 மில்லியன் இலாபமீட்டியுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!