பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் – அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்னே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான கூட்டு ஒப்பந்த அடிப்படையில் விலைக் கொடுப்பனவு அடங்களாக 750 ரூபா நாளாந்த சம்பளத்துடன், உற்பத்திறன் மற்றும் மேலதிக கிலோவுக்கான கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டது.

இந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 920 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளது.

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொழில் உறவுகள் அமைச்சரினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!