பொதுமக்களை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு!

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரச தலைமைகள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கிராமத்துடனான உரையாடல் விசேட வேலைத்திட்டத்தின் 8 ஆவது திட்டம் மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் இன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாட்டில் நூற்றுக்கு 75 வீதமான விவசாயிகள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்களை மையமாகக்கொண்டுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுத் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!