கிழக்கு முனையம் இந்தியாவுக்கு இல்லை!- அமைச்சரவையில் முடிவு.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் முன்னெடுப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அதேவேளை மேற்கு கொள்கலன் முனையத்தை தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து முன்னெடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறித்து அமைச்சரவை ஆராய்ந்துள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையத்தை மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேற்குகொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!