ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமை கூட்டத் தொடரின்போது வலியுறுத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு எழுத்து மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை கூட்டத்தொடரின் போது அமைச்சர் தினேஸ் குணவர்தன வீடியோ தொழிநுற்ப்பத்தின் ஊடாக உரையாற்றும் போது வெளிப்படுத்த அரசாங்கம் திர்மானித்துள்ளது. குறிப்பாக அந்த எழுத்துமூல ஆவணத்தில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 கீழ் ஒன்று மற்றும் 40 கீழ் ஒன்று ஆகிய யோசனைகளுக்கு எதிராகவே அறிக்கை தயாரிக்கபட்டு மனித உரிமைகள் ஆணையாளரிம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 18 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் இரண்டரை பக்கங்கள் முழுமையாக விடயத்துடன் தொடர்புடையதாக உள்ளது. ஆனால் ஏனைய அனைத்தும் விடயத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிராக இனவாத ரீதியில் குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்களை முன்வைக்க மனித உரிமைகள் ஆணையாளரினால் முயாமல் போயுள்ளது. ஆகவே இந்த இரண்டு காரணிகளையும் மையமாக கொண்டு குறித்த அறிக்கையை நிராகறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை அமைச்சர் தினேஸ்குணவர்தனவினால் கூட்டத்தொடரின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!