ருமேனியா நாட்டில் ஞானஸ்தானத்தின் போது 2 மாத குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

ருமேனியா நாட்டில் குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட போது இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ சமயத்தில் பிறந்த குழந்தைக்கு சில மாதங்களில் ஆலயங்களில் பாதிரியார் ஞான்ஸ்தானம் கொடுக்கும் முறை உள்ளது. இதற்காக பாதிரியார் குழந்தையின் மேல் புனித தண்ணீரை ஊற்றுவது வழக்கம்.

சில நேரங்களில் குழந்தையின் முகத்தை தண்ணீரில் முக்கி எடுப்பதும் உண்டு.

அதுபோல ஒரு சம்பவத்தின் போது குழந்தை இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியாவில் பிறந்து 2 மாதங்களே ஆன நிலையில் குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுத்த பாதிரியார் குழந்தையை நீரில் முக்கி எடுத்துள்ளார்.

அதையடுத்து குழந்தை மயக்கமடையவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் நுரையீரலில் 110 மில்லி தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!