இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்றும் பாரிய போராட்டம்!

மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ள அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு தலைவலியாக மாறி வருகிறது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று யாங்கூன் நகரில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் மக்கள் பெருந்திரளாக கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!