வவுனியா உள்ளிட்ட 4 இடங்களில் உருமாறிய கொரோனா!

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை உருமாறிய வைரஸ் கொழும்பு , அவிசாவளை , பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தின் மத்தியிலிருந்து பெப்ரவரி மாதம் வரை 92 மாதிரிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பு , இங்கிரிய, அவிசாவளை, மத்துகம, பியகம, வத்தளை, மத்துகம , மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களிடமும் பெற்றுக் கொண்ட மாதிரிகளிலேயே இந்த புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

ஏனைய வைரஸை விட இந்த வைரஸானது குறைந்தளவு 50 சதவீதம் வேகமாக பரவக் கூடியதாகும். இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய இலங்கையில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!