19 எம்.பிக்களுக்கு தடுப்பூசி – பலர் பின்னடிப்பு!

?????????????????????????????????????????????????????????
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார். இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எம்பிகளான மயந்த திசாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, திஸ்ஸ அத்தநாயக்க , திலிப் வெதஆராய்ச்சி , பழனி திகாம்பரம் உள்ளிட்ட 19 பேரே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை தற்போதைக்கு பெறமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தனது சமூக வலைத்தளம் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் குறைந்தது ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அத்துடன் இதே காரணத்தை முன்வைத்து மனுஷ நாணயக்கார, ஹேஷ விதானகே மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் இவ்வாறு தடுப்பூசியை பெற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!