உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையின் ஆங்கில பிரதி இன்று வழங்கப்படும்?

??????????????????????????????????????????????????????????
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையின் ஆங்கில பிரதியை, இன்று (25) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை தற்போது அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் புத்தகசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கிலப் பிரதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின் அதிலுள்ளவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கமுடியும். இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியும். சாதாரண ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சாட்சியங்களை பதிவுசெய்தல் மற்றும்குறுக்கு விசாரணை செய்ய முடியும்.

அவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கே பயன்படுத்தவும் வழக்கு தொடரவும் முடியும். இந்த ஆணைக்குழு அமைக்காவிட்டிருந்தால் விசாரணைகள் மேலும் பல காலத்திற்கு நீடித்திருக்கவும் வாய்ப்பிருந்தது. அதேபோல சில எதிரணி உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுகின்றனர். போலியான தகவல்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. உலகில் எந்த நாடுகளிலும் கோவிட்டிற்கு முன்னர் இருந்த நிலைமை இல்லை. எமது நாட்டில் இறக்குமதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. புதிய கார் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!