பிரித்தானிய மக்களுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை செய்தி!

பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மேட் ஹான்ஹாக் உள்ளூர் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற தகவலை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை பொது சுகாதார இங்கிலாந்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி எச்சரிக்கப்படுகிறது.

குறிப்பாக, இங்கிலாந்தின் 315 உள்ளாட்சி அதிகாரப் பகுதிகளில் 69 இடங்களில் முந்தைய ஏழு நாட்களை விட வழக்குகள் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Jonathan Van-Tam இன்று பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இங்கிலாந்தின் சில பகுதிகளில், வழக்கு விகிதங்கள் மெதுவாக இருந்தாலும் தவறான திசையில் மாறி சென்று கொண்டிருக்கின்றன.

இது ஒரு நல்ல அறிகுறி அல்ல, நான் பயப்படுகிறேன், இந்த நேரத்தில் நாம் இன்னும் முழையாக கொரோனாவை வெல்லவில்லை என்ற உண்மையை இது வலுப்படுத்துகிறது.

இதனால் பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்கும் படியும், அப்படியில்லை என்றால் மீண்டும் வைரஸ் பரவல் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அவர் உங்கள் வீட்டில் இப்போதை அதிகமானோர் சேரும் கூட்டம் தேவையில்லை, அது பயத்தை தருகிறது. இது ஒன்றும் விளையாட்டு கிடையாது, இதை கட்டுப்படுத்துவதில் நெருக்கத்தில் இருக்கிறோம், மக்கள் விதிகளை கடைபிடியுங்கள் என்று கூறியுள்ளார்.

சுகாதார செயலாளர் Matt Hancock கூறுகையில், இங்கிலாந்தில் 145 பேரில் ஒருவராக கொரோனா பரவல் குறைந்துள்ளது. சரிவு விகித்ததில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்பு விகிதம் இன்னும் மிக அதிகமாகவே உள்ளது. ஐந்து உள்ளூர் அதிகாரிகளில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.

மேலும், கடந்த வாரத்தில் வழக்கு விகிதங்கள் அதிகரித்துள்ளன. இதனால் கொரோனா இன்னும் முடியவில்லை, நமக்கு அது அப்பட்டமான பாடம் காட்டுகிறது.

இதைக் கட்டுக்குள் வைத்திருக்க, நாம் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இங்கிலாந்தின் இரண்டு மோசமான கொரோனா ஹாட்ஸ்பாட்கள், Northamptonshire உள்ள Corby மற்றும் Cambridgeshire உள்ள Peterborough என்று குறிப்பிட்டுள்ளார்.

Rutland, Tamworth, North Warwickshire மற்றும் Preston ஆகியவை நேர்மறையான நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க தாவல்களைக் காணும் பகுதிகளாக உள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!