சுவிஸ்ஸில் பயங்கரம்: தடுப்பூசி எடுத்துக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து பலி!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் இதுவரை 5 லட்சத்து 55 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையை நாடிய சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவும் அதே வேகத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் மருத்துவ கண்காணிப்பு குழு குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.

இதுவரை 751,009 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் மரணமடைந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.‌

மட்டுமின்றி 95 பேர்களுக்கு கடுமையான பக்கவிளைவுகளும் பதிவாகியுள்ளது. மேலும் மரணமடைந்த 16 பேரும் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

அதேவேளை தடுப்பூசி தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சுவிஸ்மெடிக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!