ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் -பிரதமர்

அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்ட போதிலும், ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக, பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெண்களை தைரியம் மிக்கவர்களாக பலப்படுத்துவது தொடர்பில் தாம் எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கம் என்ற ரீதியில், பெண்களுக்கு எதிரான வன்முறையையும், பாகுபாட்டையும் கடுமையாகக் கண்டிப்பதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சவால் மிகுந்த உலகில் அனைத்து பெண்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!