5 இலட்சம் astrazeneca covishield தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பறெவுள்ளதாக தகவல்!

அரசாங்கம் கோரியிருந்த 5 லட்சம் astrazeneca covishield தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய 5 லட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் விநியோகிக்கப்படும் என இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் இந்தியாவிடம் இருந்து 15 லட்சம் astrazeneca covishield தடுப்பூசிகள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகள் முன்னதாக நாட்டிற்கு விநியோகிக்கப்பட்டது.

இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVAX திட்டத்தின் அடிப்படையில், 2 இலட்சத்து 64 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த 7 ஆம் திகதி நாட்டிக்கு கொண்டுவரப்பட்டன.

அத்துடன் நாட்டில் தடுப்பூசி திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!