வடக்கில் மருத்துவர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டு நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்த மாணவன் என்றும், மற்றையவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலய மகா சிவாரத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி சீரமைப்புப் ணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!