தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கப்போவதில்லை: – ஏஞ்சலா மெர்க்கலை அவமதிக்கும் இன்னொரு அரசியல்வாதி

CSU கட்சியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான Horst Seehofer ஜேர்மனி சேன்ஸலரான ஏஞ்சலா மேர்க்கலுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில் அக்கட்சியைச் சேர்ந்தவரும் பவேரிய அதிபராக இருப்பவருமான Markus Söder மேலும் சேன்ஸலரை அவமதிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

பவேரியா, தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தனது இறுதி தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு பெண் சேன்ஸலர் வரப்போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒரு ஆண் சேன்ஸலர்தான் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கப்போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஆஸ்ட்ரியாவின் சேன்ஸலர் Sebastian Kurzஐ அழைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகள் பிரச்சினை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஜேர்மனியின் ஆளும் கட்சிக் கூட்டணிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளன. அகதிகளை வரவேற்கும் பண்புடைய ஏஞ்சலா மெர்க்கலுக்கு நேர் மாறான எண்ணம் கொண்டவர்கள் CSU கட்சியின் Horst Seehofer மற்றும் Markus Söder. இதற்கிடையில் CDU மற்றும் CSU கட்சிகளுக்கிடையிலான கூட்டணி உடையலாம் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!