Sputninik V தடுப்பூசியினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

ரஸ்யாவின் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசியினை நாட்டுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 7 இலட்சம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 69.65 மில்லியன் அமெரிக்க தொலர்கள் செலவில் குறித்த 7 இலட்சம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 14 இலட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு பரிந்துரை செய்திருந்தது.

இதன் முதற்கட்டமாக 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 8 இலட்சத்து 44 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து நேற்றைய தினம் வரையில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, நேற்றைய நாளில், 5 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!