சுமந்திரன், கஜேந்திரகுமாரின் கருத்துக்களை சுரேஷ் நிராகரிப்பு!

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழ் மக்களைப் பழிவாங்குவது போன்றே அமைந்துள்ளது என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜெனிவா தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முன்வைத்துள்ள கருத்துகள் ஏற்புடையவையல்ல.

ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நேரடியாகவே எதிர்க்கும நிலையில், தமிழர் தரப்பிலிருந்தும் ஒருமித்த நிலைப்பாடுகள் இல்லாமல் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

குறிப்பாக, சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துக்களையை வெளியிட்டிருக்கின்றனர் , ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்களை பழிவாங்குவது போன்று அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளதென்றும் சாடினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!