மாகாணசபைத் தேர்தலில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை பயனற்றது: அபயராம விகாராதிபதி

மாகாண சபைத் தேர்தல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவதில் பயன் கிடையாது என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பயனற்றது எனவும், அது குறித்து நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கு இந்தியா முன்னின்று செயற்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தி, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக செயற்படுத்துமாறு இந்தியா அண்மையில் தெரிவித்துள்ளமை குறித்து தாம் கவனஞ் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இலங்கை சுயாதீனமான நாடு எனவும், நாட்டுக்கு தேவையான விடயங்களை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும், அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!