தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி திட்டம் மீண்டும் முன்னெடுப்பு!

நாட்டில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த 31 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

அத்துடன் Oxford AstraZeneca தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்திருந்தார்.

எனினும் Oxford AstraZeneca தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் மேலும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே AstraZeneca கொரோனா தடுப்பூசி தொகுதி எதிர்வரும் ஜீன் மாதம் இறுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவின் Serum நிறுவனத்தினால் வழங்கப்படவிருந்த கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!