யாழ் மற்றும் கொழும்பு 10 உள்ளிட்ட பகுதிகளில் 5 உயிரிழப்புக்கள் பதிவு..?

நாட்டில் கொரோனாவினால் மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிவசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், பத்தரமுல்ல பகுதியைச்சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், 77 வயதுடைய ஆண் ஒருவரும் , கொழும்பு 10 ஐச் சேர்ந்த 67 மற்றும் 71 வயதுகளையுடைய ஆண் இருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 71 வயதுடைய வயதுடைய ஆண் ஒருவரும், இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்டவர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் நேற்று 761 பேரின் மாதிரிகள் PCR பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 16 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!