கோத்தாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை! – என்கிறார் பஷில்

தனக்கும் தனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்­கு­ம் இ­டையில் எந்­த பிரச்­சி­னையும் இல்லை என்றும் தாம் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ.

‘எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் முரண்பாடு நில­வி ­வ­ரு­வ­தாக பிர­சாரம் செய்­து­ வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜபக்ஷ­வுக்­கு­மி­டையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. நாங்கள் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.

ஜனா­தி­பதி தேர்தல் வரும்­போது யார் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்­மா­னிப்பார். மஹிந்­த­ ராஜபக்ஷவையே மக்கள் விரும்­பு­கின்­றனர். எனவே மஹிந்­த ­ராஜபக்ஷ யாரை கள­மி­றக்­கு­கின்­றாரோ அவர் வேட்­பா­ள­ராக வருவார். அவரின் வெற்­றிக்­காக நாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம்.

மாறாக எனக்கும் சகோ­தரர் கோத்­த­பா­ய­வுக்­கு­மி­டையில் எந்­தப் ­பி­ரச்­சி­னையும் இல்லை.நாங்கள் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்­டு­ வ­ரு­கின்றோம். எமக்­கி­டையில் பிரச்­சி­னை­யி­ருப்­ப­தாக பொய்ப் பிர­சாரம் செய்­கின்­றனர். நாங்கள் புரிந்­து­ணர்­வு­டனும் ஒற்­று­மை­யு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!