பிரித்தானியாவில் ‘அஸ்ட்ராசெனகா’ தடுப்பூசிக்கு 19 பேர் பலி: 79 பேருக்கு பக்க விளைவு!

பிரித்தானியாவில் போடப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியில் 79 பேருக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 19 இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசிக்கு முதல் நாடாக அனுமதி கொடுத்ததே பிரித்தானியா தான், ஏனெனில், பிரித்தானியா அரசு அவசர கால அனுமதி வழங்கியதை அடுத்து பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் படி பிரித்தானியா முழுவதும் வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியால் 79 பேருக்கு ரத்த உறைவு பிரச்சனை ஏற்பட்டுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20,000,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு மொத்தம் 51 பெண்கள் இந்த விளைவுகளை சந்தித்துள்ளதுடன், 18 முதல் 79 வயதுக்குட்பட்ட 21 ஆண்கள் இரத்தக் உறைவு பாதிப்பைக் கொண்டுள்ளனர்,

இறந்த 19 பேரில் 14 பேருக்கு பெருமூளையில் சிரை சைனஸ் த்ரோம்போசிஸ் (CVST) இருந்துள்ளது. இது மூளையில் இருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் ஒரு வகை இரத்த உறைவு ஆகும்.

ஆனால், அதே சமயம் ஒவ்வொரு விஷயத்தின் இறப்பிலும் என்ன காரணம் என்பது குறித்து முழுமையாக வெளியாகவில்லை.

பிரித்தானியாவில் உள்ள மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்பு ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) இந்த தடுப்பூசி அரிதான உறைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வல்லுநர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகாவுக்கு பதிலாக பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி போடும் படி பரிந்துரைக்கின்றனர்.

இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய MHRA-வின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜூன் ரெய்ன், இது போன்ற உறைவுகள் ஏற்படுவது மிகவும் அரிதானவை.

தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் சமநிலை வயதானவர்களுக்கு மிகவும் சாதகமானது, ஆனால் இது இளையவர்களுக்கு மிகவும் சீரானதாக இருக்கிறது,

மேலும் தடுப்பூசி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது போன்ற விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று MHRA-வில் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் விளைவுகள் குறித்த சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன, இது ஒரு வலுவான சாத்தியக்கூறு என்றாலும், தடுப்பூசி தான் இந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவதற்கு ஒரு நீண்ட ஆய்வு தேவை என கூறினார்.

நிர்வாக இயக்குனர் எமர் குக் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், கொரோனா வைரஸ் என்பது மிகவும் கடுமையான நோயாகும்.

தினமும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது கடுமையான நோய் பரவுவதை தடுக்கிறது, உயிரைக் காப்பாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிகவும் முக்கியமானது.

பேரழிவு விளைவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க நம்மிடம் உள்ள தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும். இரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்படும், வழக்குகள் தடுப்பூசி போட்டதன் காரணமாக ஏற்பட்டதா என்பதை பட்டியலிட முடிவு செய்துள்ளதாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!