பொதுமக்கள் ஆணையை நிறைவேற்றுவது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும்: விமல் கருத்து!

அடிப்படைவாதிகளின் தேவை கருதி செயற்படுவதை தவிர்க்கவே இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச தேவைகளை மாத்திரம் உள்ளடக்கப்பட்ட கொள்கை பிரகடனம் காரணமாக 69 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதனை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் ஆணைக்கு எப்போது மதிப்பளித்து செயற்பட வேண்டும். பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் ஸ்திரமான உறவுத்தன்மை பேணப்பட வேண்டும்.

பொதுமக்கள் ஆணையை நிறைவேற்றுவது அனைத்த மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். எனவே பொதுமக்களுடன் சிறந்த உறவுமுறை பேணப்படாவிடின் தோல்வி அடைந்த அரசியல்வாதிகளாகவே கருதப்படுவார்கள். அடிப்படைவாதிகளின் தேவை கருதி செயற்படாமல் தமிழ் சிங்கள மக்களிடையே இனமத தர்க்கங்களை தவிர்த்து செயற்பட வேண்டும் என்பதே மக்கள் ஆணையின் கருத்தாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!