பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

கடந்த மாதம் 23 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டங்களின் போது அவர்கள் இந்த கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்திருந்தனர்.

எனினும் அந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் தலைவருமான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றுள்ளார்.

மேலும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் ஊடாக நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே முன்வைத்த கோரிக்கையும் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.