வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு வரும் தரும் உள்நாட்டுப் பிரஜைகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இராஜதந்திரிகள், 14 நாட்களில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டுக்குள் உள்நுழையும் போது அல்லது வெளியேறும் போது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைக்கு, இரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகள் உட்படுத்தப்பட வேண்டிய தேவை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், 12 அல்லது 12 வயதுக்கு மேற்பட்டோர், நாட்டுக்கு உள்நுழையும் போது அல்லது வெளியேறும் சந்தர்ப்பங்களில், கட்டாயம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்கள், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!