நேற்று மட்டும் 2 429 பேருக்குக் கொரோனா!

நாட்டில் நேற்று மட்டும் 2 429 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் .

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 527ஆக அதிகரித்துள்ளது.

25ஆயிரத்து 20 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!