பசிலின் அமெரிக்க பயணம் – நாமல் கூறும் காரணம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தனிப்பட்ட காரணங்களுக்காகவே, திடீரென அமெரிக்கா சென்றதாகவும் மருத்துவ சிகிச்சை பெறும் அளவுக்கு அவருக்கு எந்த நோயும் கிடையாது என்றும் அமைச்சர நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பசிலின் அமெரிக்க விஜயம் தொடர்பில் அமைச்சர் நாமலிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றது தனிப்பட்ட காரணத்துக்காகவே. இது வழமையானது. அவர் மூன்று வாரங்களில் நாடு திரும்புவார். அவர் சிகிச்சை பெறும் அளவுக்கு அவருக்கு எவ்வித வருத்தமும் இல்லை. வாழ்க்கையில் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். எனவே இதில் நாங்கள் தலையிடுவது பொருத்தமாக இருக்காது என நான் நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!