PCR பரிசோதனைகளின் தரம் மற்றும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

தனியார் பிரிவினூடாக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் தரம் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

PCR இயந்திரமொன்றில் ஒரு நாளைக்கு 1500 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமென்றால், சில நிறுவனங்கள் 5000, 7000 வரை பரிசோதனைகளை முன்னெடுக்க முனைவதாக அமைச்சின் வைத்திய பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜி. விஜேசூரிய கூறியுள்ளார்.

இந்த பரிசோதனைகளின் தரம் குறித்து சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, இவ் வாரத்திற்குள் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி, விடயம் குறித்த சுற்றுநிரூபமொன்றை வௌியிடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!