விக்னேஸ்வரனின் செயற்பாட்டினால் கூட்டமைப்புக்கு நெருக்கடி! – சுமந்திரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை.என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!