மகபொல நிதியத்தின் 440 மில்லியன் ரூபா ஊழல் – கீர்த்தி தென்னகோன்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பிரிசில் வழங்கும் மகபொல நிதியத்திலிருந்து நானூற்று நாற்பது மில்லியன் ரூபா நிதி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சிக்கியுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அது பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்திள்ளது. ஆகவே பல்கலைக்கழக மாணவர்களின் புலமைப்பரிசில் வழங்கும் மகபொல நிதியத்திலும் கை வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உயர்கல்வியமைச்சர் லலித் அதுலத் முதலியின் திட்டத்திற்கமைவாகவே மகபொல புலமைப்பரிசில் நிதியம் அமைக்கப்பட்டது. ஆகவே அந்நிதியத்தினால் தெரிவுசெய்யப்படும் மாணவர் ஒருவருக்கு தற்போது ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. குறித்த நிதியத்திற்கு கிடைக்கும் வட்டி மூலமே மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது

எனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிதி பிணைமுறி விவகாரதததிற்கு பெறப்பட்ட காலப்பிரிவிலேயே மகபொல புலமைப்பரிசில் நிதியத்திலிருந்தும் நிதி பெறப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!