50 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் வந்தன!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் மேலும் 50,000 டோஸ் நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துபாயிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலமாக இந்த தடுப்பூசி பங்குகள் நேற்றிரவு 10.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

தடுப்பூசி அளவுகளின் பங்கு பின்னர் சிறப்பு மருந்து குளிர்பதன வசதிகளுடன் கூடிய அரச மருந்துக் கழகத்திற்குச் சொந்தமான வாகனங்களில் கொழும்பில் உள்ள முக்கிய சேமிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!