உலக நாடுகளுக்கு 5.5 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்க அரசு முடிவு!

உலக நாடுகளுக்கு, 5.5 கோடி, ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்துகளை நன்கொடையாக வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்து உள்ளது.அமெரிக்காவில் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில், 65 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளன.

இதையடுத்து இம்மாத இறுதிக்குள், 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.அதில், 1.6 கோடி தடுப்பூசிகள் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூடான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட, 18 ஆசிய நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘அமெரிக்காவின் இந்த முடிவால் ஏழை நாடுகள் பயனடையும்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!